Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ரோசாவின் ராசா, குழந்தைகள் தின விழா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் காந்தியும் நேருவும், நேரு கட்டமைத்த இந்தியா, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, நேருவின் பஞ்சசீலக் கொள்கை, அமைதிபுறா நேரு என்ற தலைப்பில் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், 2-வது பரிசாக 3000 ரூபாய், 3-வது பரிசாக 2000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்நிலையில் பேச்சு போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் [email protected] அல்லது 9786966833 என்ற மொபைல் எண் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |