Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. தமிழகத்தில் மீண்டும்…. சுகாதாரத்துறை உத்தரவு…!!

தமிழக்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா பராமரிப்பு மையங்களை திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் மக்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே கொரோன பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் அதிகம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மையங்கள் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |