Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேகத்தடை….. குலுங்கிய வண்டி…… வயிற்றை கிழித்த கண்ணாடி….. இளைஞர் மரணம்….!!

செங்கல்பட்டு அருகே வேகத்தடையில் வண்டி குலுங்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் சர்தார். இவர் பழைய கண்ணாடிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது டெம்போவில் டிரைவருடன் சென்று அப்பகுதியை சுற்றியுள்ள ஏரியாக்களில் பழைய கண்ணாடிகளை சேகரித்து வந்துள்ளார். பின் டெம்போ நிரம்பியதும் இருவரும் புலியூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வரும்போது கண்ணாடிகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதற்காக சர்தார் அமர்ந்துவிட்டார். டெம்போவின்  பின்பகுதியில் அமர்ந்துவிட்டார். இந்நிலையில் மாமல்லபுரம் அம்பாள் நகர் பகுதி அருகே வரும்போது பெரிய வேகத்தடையில் வண்டி பயங்கரமாக குலுங்கி கூர்மையான கண்ணாடி பாகங்கள் சரிந்து சர்தார் வயிற்றைக் குத்திக் கிழித்தது.

இதில் அவர் வலியால் அலற வண்டியை நிறுத்திய ஓட்டுனர் பின்னால் வந்து பார்க்கையில் சர்தார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கி ச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

  பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்க, காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |