கொரோனா பரவலை தடுக்க ரூ.16 கோடி செலவில் முக கவசம் கொள்முதல் செய்ய ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது
கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அவசியமான ஒன்றாக அமையும் நிலையில் ஆந்திராவில் 16 கோடி மதிப்பில் முக கவசங்களை கொள்முதல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் மறுஆய்வு கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில் மூன்றாம் கட்ட கணக்கெடுப்பிற்கு பின்னர் 32349 பேர் சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு மேலும் 9507 பேருக்கு கொரோனாதொற்று பரிசோதனைக்கு சுகாதார அமைப்பினர் பரிந்துரை செய்துள்ளனர். இன்றுவரை 417 பேர் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 பேர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள், 12 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 199 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், மீதி இருக்கும் 161 பேர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்கின்றனர்.