ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி
தேவையான பொருட்கள் :
பொட்டுக்கடலை – 1 கப்
காய்ந்த மிளகாய் – 7
பூண்டு – 4 பல்
சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் சீரகத்தை போட்டு முதலில் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் மிளகாய் , சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுத்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தயார் !!!