Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைஸியான குளுகுளு மசாலாமோர் ..!! ஒரு நிமிடத்தில் தயார் ..!!

கோடைக்கேற்ற குளுகுளு மசாலாமோர் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
தயிர்- 2 கப்
பச்சைமிளகாய்-2
புதினா-சிறிதளவு
இஞ்சி- சிறு துண்டு
தண்ணீர்-4 கப்
சாட் மசாலா- ஒரு சிட்டிகை
சீரகத்தூள்-ஒரு சிட்டிகை
உப்பு- சிறிதளவு
curd க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் தயிரை  மிக்ஸியில்  ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா,  இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும் . பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் வெயிலுக்கேற்ற  குளுகுளு மசாலாமோர் தயார்..!!

Categories

Tech |