முடக்கு அறுத்தான் என்பது தான் காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. முடக்கத்தான் மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை – 2 கப்,
புழுங்கல் அரிசி – ஒரு கப்,
உளுந்து – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைக்கவும். சூடான தோசைக்கல்லில் ஊற்றி மூடி வேக விடவும். விருப்பப்பட்டால் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். சுவையான முடக்கத்தான் கீரை தோசை ரெடி !