பசலைக் கீரை சூப்
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
சோள மாவு – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
வெண்ணெய் – தேவைக்கேற்ப
பிரெஷ் க்ரீம் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் வெண்ணெய் போட்டு உருக்கி, வெங்காயம் தக்காளி, கீரை, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.பிறகு இறக்கி ஆறியபின் மிக்ஸியில் விழுதாக அரைத்து, சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி மிளகுத்தூள், ஃபிரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கினால் சுவையான பசலைக் கீரை சூப் தயார் !!!