பல்வேறு பரிகாரங்களை செய்வதன் மூலம் தோஷங்களில் இருந்து விடுபட்டு சனீஸ்வர பகவானின் அருளை பெறலாம்.
சனிக்கிழமை நாளன்று சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேறலாம். ஜோதிடத்தில் சனீஸ்வர பகவான் நியாயவதி என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். அதனாலேயே சனீஸ்வர பகவான் தராசு சின்னம் உடைய துலாம் ராசியில் உச்சமாக இருக்கிறார். மேலும் சனீஸ்வர பகவானின் சன்னதியில் நின்று வழிபடும் போது நேரில் நின்று வழிபடாமல், ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்குவதோடு, அவரின் பரிபூரண அருள் கிட்டும். மேலும் பல்வேறு பரிகாரங்களை செய்வதன் மூலம் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
- எள் கலந்த சாதத்தை தினந்தோறும் காகத்திற்கு வைக்க வேண்டும்.
2. சனிக்கிழமை நாளன்று இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும்.
3. சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.
4. சிவபெருமானுக்கு சனிக்கிழமை நாளன்று வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து வழிபடலாம்.
5. அசைவ உணவுகளை சனிக்கிழமை நாளன்று கண்டிப்பாக சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது.
6. நல்லெண்ணெய்யை தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு சனிக்கிழமை நாளில் குளித்தால் கெடுதல் குறையும்.
7. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுவதன் மூலம் சனி பகவானின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
8. ராகு கால வேளையில் ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று கால பைரவரை வணங்க வேண்டும்.
9. கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடலாம்.
10. முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.
11. தினமும் கோமாதா பூஜை செய்ய வேண்டும்.
12. ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தி உதவலாம்.
13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை உண்டாக்கும்.
14. பிறருக்கு அன்ன தானம் அளிக்கலாம்.
15. ஜீவ சமாதி மற்றும் சித்தர்களின் பீ டங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
16. உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் விதவைகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம்.
17. சனிக்கிழமை தோறும் வன்னிமரத்தை சுற்றி வந்து வழிபடுவதன் மூலம் பாதிப்புகள் விலகி செல்லும்.
18. சிவபெருமானுக்கு பிரதோஷ தினங்களில் வில்வ இலை சாற்றி வழிபாடு செய்யலாம்.
19. சனிபகவானின் தொல்லையிலிருந்து விடுபட தினமும் ராம நாமம் உச்சரித்து வந்தால் நன்மை கிட்டும்.
20. சனிக்கிழமை நாளன்று பெருமாளை வணங்கி காக்கைக்கு உணவு படைத்தல் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.