சனிக்கிழமை எள் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிட்டும்.
சனிக்கிழமை தினத்தன்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வந்தால் தோஷங்களிலிருந்து விடுபட்டு வாழ்வில் நன்மை கிட்டும். அதாவது சனிக்கிழமை நாளில் பகவானின் சன்னதிக்கு சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். மேலும் பிறருக்கு உதவி செய்வதன் மூலமும், அவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதன் மூலமும் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றிபெறலாம். ஆனால் நம் மீது நேரடியாக சனி பகவானின் பார்வை படக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல கோவில்களுக்கு சென்று சனிபகவானை வழிபட்டாலும் மற்றவர்களுக்கு எந்த தீமையும் செய்யாமல் உண்மையாக வாழ்ந்தால் தோஷங்களில் இருந்து விடுபட்டு இன்பமாக வாழலாம். இந்த சனிக்கிழமை நாளில் எள் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபட்டால் அவரின் கோபத்தில் இருந்து விடுபட்டு கூடுதல் பலன்களை பெற்று பரிபூரண அருளோடு வாழலாம் என்பது ஐதீகமாகும்.