வீட்டில் தெய்வ கடாட்சம் சூழ சில குறிப்புகள்
வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்துவதற்கு நீர் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். இதனால் ஜென்ம ஜென்மமாக இருந்த தரித்திரம் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.
ஒற்றை ருத்ராட்சத்தை கழுத்துக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்க கூடாது. எப்பொழுதும் கழுத்தில் தான் இருக்க வேண்டும்.
அம்மாவாசை அன்று வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜைகள் எதுவும் செய்யாமல் பித்ருக்களை மட்டுமே அன்று வழிபட வேண்டும்.
ருத்ராட்சம், துளசிமணி, பரிகம் போன்ற மாலைகளை ஜபம் ஹோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரத்தில் அணியக்கூடாது.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இதெல்லாம் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. வீட்டில் உள்ள பணம் இதன் மூலமாகவே வெளியில் செல்கிறது.
கோவிலுக்குப் போகும் முன்பு தலையை பிரித்து போடாமல் தலைமுடியின் நுனியில் ஒரு முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் பொழுதும் இவ்வாறு தலையில் முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
ஏற்றிய விளக்கை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. விரலை வைத்து அல்லது பூவை வைத்து விளக்கினை அமர்த்தவேண்டும். ஆண்கள் விளக்கை அமர்த்த வேண்டாம்.
துளசி மற்றும் வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி ,அம்மாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் இரவு நேரத்தில் பறிக்கக்கூடாது.