Categories
உலக செய்திகள்

“குப்பையில் கிடந்த கரண்டிக்கு இப்படி ஒரு மவுசா!”.. 2 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது..!!

இங்கிலாந்து நாட்டில் 13ம் நூற்றாண்டு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட வெள்ளி கரண்டி 2 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் ஒரு நபர் வீதிகளில் கார் பூட் விற்று வந்திருக்கிறார். அப்போது, நீள கைப்பிடி உடைய மிகவும் பழைய நெளிந்துபோன கரண்டி ஒன்றை 90 பைசாவிற்கு வாங்கியுள்ளார். தற்போது அந்த கரண்டி எதிர்பாராத வகையில் இணையதள ஏலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

அந்த நபர் சோமர்செட்டின் க்ரூகெர்னில் இருக்கும் லாரன்ஸ் ஏலதாரர்களிடம் அந்த கரண்டியை ஏலத்தில் விற்க பதிவு செய்திருக்கிறார். அப்போது அவர்களின் வெள்ளி நிபுணரான அலெக்ஸ் புட்சர் என்பவர் அந்த கரண்டியை ஆராய்ந்துள்ளார். அப்போது தான் அந்த கரண்டி 13 ஆம் நூற்றாண்டின் “வெள்ளி கரண்டி” என்று கண்டறியப்பட்டது.

அதற்கு 51,712 ரூபாய் என்று விலையை தீர்மானித்துள்ளனர். அதன்பின்பு இணையதள ஏலத்தில் 2 லட்சத்திற்கு மேல் விற்பனையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |