Categories
விளையாட்டு கிரிக்கெட்

400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை…. அவர் ஒரு லெஜன்ட்…. அஸ்வினுக்கு குவியும் பாராட்டு….!!

400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினை விராட் கோலியும் ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார். இவர் 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். முதல் நிலை வகிக்கும் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். இப்போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி அஸ்வினை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எனவும் அவரை லெஜெண்ட் என்றுதான் அழைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

அஸ்வின் சாதனைக்கு ஹர்பஜன் சிங் 400 விக்கெட்டுகளை எடுப்பது என்பது மிகவும் கடினமான செயல் என்றும் அவர் பலமுறை இந்திய அணி வெற்றி பெறவும் உதவியுள்ளார் என்று புகழாரம் கொடுத்துள்ளார் .மேலும் அவர் 400 விக்கெட்டுகளை அஸ்வின் எடுக்காவிட்டாலும் அவர் லெஜெண்ட் தான் எனவும் கூறியுள்ளார். அஸ்வினை நானும் கேப்டன் விராட் கோலியும் லெஜெண்ட் என்றுதான் அழைப்போம் எனவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |