Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க மாற்று வழி..! பிரபல நாட்டில் புதிய கண்டுபிடிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து நாடு மூக்கு வழி பயன்படுத்தும் ஸ்பிரே மருந்தை கொரோனா வைரஸ் நோயை தடுக்க உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அரசாங்கம் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க இங்கிலாந்து நாட்டில் போக்ஸ்பயோ என்ற நிறுவனம் மூக்கு வழியாக பயன்படுத்தும் ஸ்பிரே ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் அந்நாட்டு நிறுவனம் இந்தியாவில் அந்த ஸ்பிரே மருந்தினை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் மூக்கு வழியாக பயன்படுத்தும் அந்த ஸ்பிரே மருந்து சுமார் 63 சதவீதம் பாதுகாப்பு தன்மை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த ஸ்பிரே மருந்தை முதல் கட்டமாக 648 சுகாதார பணியாளர்களுக்கு சோதனை செய்து பார்த்ததாகவும், அதில் 63% கொரோனா பாதிப்பை தடுக்கும் செயல்திறன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 6 முதல் 8 மணி நேரம் வரை ஒருவர் இரண்டு நாசிகளிலும் இந்த மருந்தை செலுத்தி கொள்வதால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |