இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நேற்று ஒரே நாளில் 794 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்றளவும் புதிய உச்சத்தில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,45,384 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் நேற்று மட்டும் 794 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றுவரை கொரோனா நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கைய 1,68,436 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 77,567 சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அவர்களின் மொத்த எண்ணிக்கை 9,80,75,160 பேருக்கு போடப்பட்டுள்ளது.