Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்….!! ”மே மாதம் உச்சம், செப்டம்பர் மாதம் குறையும்” ஆய்வில் தகவல் …!!

கொரோனாவின் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக தாக்கத்தின் அளவு குறையும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் பத்திரிக்கை குழு சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து  நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தாலி, அமெரிக்கா போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாகக்கொண்டு சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் வைத்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் மே மாதம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை விட அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் முன்னேற்றத்தை கணக்கிட மூன்று மாதிரிகளை உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு மாதிரியும் வெவ்வேறு நிலைகளின் கீழ் எவ்வாறு பரவும் என்பதற்கான மதிப்பீட்டை கொடுத்துள்ளது. அதோடு இந்த நெருக்கடிக்கு அரசாங்கமும் சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான வழிகளையும் வழங்கியுள்ளன. மே மாதம் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டால்  செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பாதிப்பு இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மே 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்தால்  ஜூன் மாதமே பாதிப்பை தடுத்து நிறுத்தும் வாய்ப்புகளும் உள்ளது என அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது

Categories

Tech |