Categories
உலக செய்திகள்

“இவர் ஆட்சிக்கு வந்தால் பேரழிவு தான்!”.. ஈரானின் அடுத்த அதிபர் குறித்து வெளியான தகவல்கள்..!!

ஈரானில் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள Ebrahim Raisi குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஈரானில் அதிபர் Hassan Rouhani-யின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த அதிபர் போட்டியில் 7 பேர் இருக்கும் நிலையில் Ebrahim Raisi (60) பதவியேற்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1980 ஆம் வருடங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Ebrahim Raisi கடந்த 1980 ஆம் வருடத்தில் தன் இளம்வயதில் அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். அதன்பின்பு அவருக்கு 8 வருடங்களில் தெஹ்ரான் நகரின் அரசு வழக்கறிஞராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

அந்த சமயங்களில் ஈரான் அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக சுமார் 3000 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள். மேலும் கடந்த 1983ம் வருடத்தில் Farideh Goudarzi என்ற 21 வயது கர்ப்பிணி பெண்ணை அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக கைது செய்துள்ளனர்.

இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், தன்னை கொடுமைப்படுத்திய 7 பேரில் Ebrahim Raisi உண்டு. மேலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து கடுமையாக சித்திரவதை செய்து வெளிப்பகுதியில் தூக்கிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். தற்போது அல்பேனியாவில் வாழ்ந்து வருகிறார். Ebrahim Raisi பதவிக்கு வந்தால் ஈரான் மக்கள் மற்றும் உலக நாடுகளுக்கும் பேரழிவு தான் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |