ஐரோப்பாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அந்நாட்டிற்கு சீனா தடை விதித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பறவை காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பறவை காய்ச்சல் பரவி வரும் நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருக்கும் கோழிகள் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில் N5N8 என்ற பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் அப்பகுதிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சுங்கப் பொது நிர்வாகம், வேளாண்மை மற்றும் ஊரகதுறை அமைச்சகம் இந்த தடையை அறிவித்துள்ளது.