செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்தியாவிலேயே முதலமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் அவர் தான் முதலமைச்சராக பதவி வகிக்க விரும்புவார்களே ஒழிய இன்னொரு ஒருவரை முதல்வராக சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் 2021ல் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்மொழிந்தார்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முதலமைச்சராக இருந்தவர் இன்னொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு நேர்மையான மனிதர், பெருந்தன்மையாக மனிதர் ? எவ்வளவு மனசாட்சி படி செயல்படுகிறார் என்று கொஞ்சமாவது ஈவு, இரக்கமான, ரோசம், சூடு, சொரணை இருக்க்க வேண்டும். ஒரு கட்சித் தலைவராக இருப்பவர்களுக்கு பண்பாடு இருக்க வேண்டும். அரசியல் நாகரீகம் வேண்டும்.
எதுவுமே இல்லாமல் சும்மா கை ரெண்டையும் விரிச்சிட்டு வந்து, எடப்பாடி பழனிச்சாமி ஒரே டென்ஷனில் அந்த கத்து கத்துவதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பண்பாடு இல்லாதவர்கள் அரசியல் கட்சிக்கு தலைவராக வருவதற்கு தகுதியே இல்லாதவர்கள். அந்த நிலைப்பாட்டில் இன்றைக்கும் சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை நடத்துவதற்கோ, அரசியல் நாகரிகம் தெரிந்தவர் அல்ல. அதனால் அவர் இடைப்பட்ட காலத்தில் வந்தவர், அதனால் அவருக்கு அரசியல் நாகரீகம் தெரியாது.
அம்மா அவர்கள் ஓபிஎஸ் அண்ணனை முதலமைச்சராக உட்கார வைத்து போகாமல், இவரை உட்கார வைத்திருந்தால் என்ன சொல்லி இருப்பார் ? ஜெயலலிதா அம்மாவிற்கு இந்த கட்சிக்கும் தொடர்பு கிடையாது என்று சொல்லிவிட்டு, இவரே முதலமைச்சராக தொடர்ந்து அந்த பதவியை தக்க வைத்திருப்பார். அம்மாவிற்கு துரோகம் செய்திருப்பார், அதனால் இவர் வாழ்க்கையில் எல்லாமே துரோகம் என விமர்சித்தார்.