முளைகட்டிய தானிய சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 1 கப்
கம்பு – 1 கப்
ராகி – 1 கப்
கொண்டைக்கடலை – 1 கப்
கோதுமை – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தானியங்களை ஊற வைத்து , தனித்தனியாக ஒரு துணியில் கட்டி முளை கட்ட விட வேண்டும் . பின் முளைகட்டிய தானியங்களை அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும் . கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஊற விடவும். மாவை உருண்டைகளாக உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுத்தால் முளைகட்டிய தானிய சப்பாத்தி தயார் !!!