Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸிற்கு எதிராக 100% பாதுகாப்பு.. ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து வெளியான தகவல்..!!

ரஷ்ய நிறுவனம், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது, டெல்டா வைரஸுக்கு எதிராக 100% பலனளிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் பி தடுப்பூசி தான் கொரோனா வைரஸிற்கு எதிராக உலகில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் தயாரிக்கப்பட்டது. கமலேயா என்ற ஆராய்ச்சி மையம் தான் இந்த ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை தயாரித்தது.

இதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின், ஆய்வு கூடத்தின் தலைவரான விளாடிமிர் குஷ்சின்  தெரிவித்துள்ளதாவது, ஸ்புட்னிக் தடுப்பூசியானது, டெல்டா வைரஸுக்கு எதிராக செயல்படும். இது மிகவும் பாதுகாப்பானது. புதிதாக உருமாற்றமடைந்த வைரஸிற்கு எதிராக 100% பாதுகாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |