புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த காரின் முன்புறம் ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் மற்றும் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-கே.யு.வி மாடல் கார்களின் என்ஜின் மூலம் 40 KW பவர் மற்றும் 120 NM டார்க் செயல்திறன் கிடைக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 16kWh பேட்டரி பேக் வழங்கியுள்ளதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 km வரை பயணம் செய்யும் வகையிலும் ,காரின் எடையை ஈடுசெய்வதற்காக சஸ்பென்ஷனில் மாற்றம் செய்தும் உள்ளது. இந்த இ-கே.யு.வி-ன் விலை ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சலுகைகளின் மூலம் இதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.