Categories
உலக செய்திகள்

மீளமுடியாத கடனில் சிக்கியவரா….? உயிரை காவு வாங்கும் விளையாட்டு…. ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்….!!

ஸ்குவிட் கேம் போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொழுதை போக்கியுள்ளனர். 

சவுதி அரேபிய நாட்டின் தலைநகர் ரியாத் ஆகும். இங்கு  ஆண்டு தோறும்  கேளிக்கை திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் நடைபெற்ற கேளிக்கை திருவிழாவில்  ஸ்குவிட் கேம் எனும் இணைய தொடரை மையமாகக்கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த கேளிக்கை திருவிழாவில் மக்கள் அனைவரும்  அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இதில் கடன் சுமையில் சிக்கியவர்கள் பணத்திற்காக தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் விளையாடும் ஆபத்தான போட்டிகளை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த ஸ்குவிட் கேம் இணைய தொடரானது போட்டியாளர்களை ஆபத்தான நிலைக்கு தள்ளும். மேலும்  இந்த  இணைய தொடரானது உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டியானது ஒவ்வொரு நாளும் 8 ரவுண்டுகளை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ரவுண்டிலும் 70 போட்டியாளர்கள் வரை  பங்கேற்று  விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |