Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. 35 துண்டுகளாக வெட்டியதில் பயமே இல்லை…. அப்தாப் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போலீஸ்….!!!!!

மும்பையைச் சேர்ந்த ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் டெல்லியில் வைத்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம் பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பான தகவல்களை வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்தாப் போலீஸிடம் எப்படி சிக்கினார் என்ற தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது ஸ்ரத்தாவை காணவில்லை என காவல் நிலையத்தில் அவருடைய பெற்றோர் புகார் கொடுக்கவே அந்த புகாரின் படி அப்தாப்பை பலமுறை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும் நானும் ஸ்ரத்தாவும் பிரிந்து விட்டோம் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது என்ற ஒரே பதிலை மட்டும் தான் அப்தாப் கூறியிருக்கிறார். இதனால் காவல்துறையினருக்கு அப்தாப் மீது துளி கூட சந்தேகமே வரவில்லை. கொலை செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வோ, பயமா அப்தாப் மனதில் சிறிதளவு கூட இல்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அப்தாப் மீது சந்தேகம் வராத காரணத்தினால் அவரை கண்காணிப்பதற்காக காவல் துறையினர் ஒருவரை நியமித்துள்ளனர். அப்போது ஒரு முறை குடித்துவிட்டு காதலியை  சாமர்த்தியமாக கொலை செய்தது குறித்து உளரியுள்ளார். இதனையடுத்து தான் காவல்துறை அப்தாப்பை வசமாக கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஸ்ரத்தாவின் உடல் பாகங்களை வீசிய இடத்தை காட்டியுள்ளார். இதில் சில எலும்புக்கூடுகள் மட்டுமே காவல்துறையினருக்கு கிடைத்துள்ள நிலையில், அது ஸ்ரத்தாவின் டிஎன்ஏ உடன் பொருந்துகிறதா என்பதை பரிசோதிக்க அனுப்பி வைத்துள்ளார்கள்.‌

அப்தாப் ஒரு கை தேர்ந்த சமையல் கலைஞர் என்பதால் வீட்டின் கழிவறையில் வைத்து இளம் பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கழிவறையில் சிலவற்றை வீசியுள்ளார். அதோடு வீட்டில் துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக பல்வேறு விதமான ரசாயனங்களை பயன்படுத்தி வீட்டை சுத்தமாகவும் வைத்துள்ளார். இதன் காரணமாக அப்தாப் வீட்டில் ஒரு தூசு அளவு ஆதாரம் கூட கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ஆதாரங்களை கண்டுபிடிப்பது என்பது சற்று சவாலாகத்தான் இருக்கும் என்று காவல் துறையினர் கூறுகிறார்கள். மேலும் ஸ்ரத்தாவின் நண்பர்கள் உண்மையாக காதலிக்கும் ஒருவரால் தன்னுடைய காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்ய முடியாது என்றும், இதற்குப் பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்றும், அதை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |