Categories
தேசிய செய்திகள்

“ஸ்ரத்தா கொலை”.‌…. 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக அப்புறப்படுத்திய கொடூரம்…… காதலன் பிடிபட்டது எப்படி….?

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரத்தா (26) என்ற பெண் அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மும்பையில் தன்னுடைய காதலுடன் வசித்து வந்த ஸ்ரத்தா அதன்பின் டெல்லிக்கு குடியேறியுள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் வாழ்ந்த நிலையில் அப்தாப் திடீரென தன்னுடைய காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக அப்புறப்படுத்தியுள்ளார்‌.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்தாப்பை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது டெல்லிக்கு குடியேறிய பிறகு அப்தாப் பெண்களுடன் சமூக வலைதளம் மூலம் பழகியுள்ளார். இது ஸ்ரத்தாவுக்கு பிடிக்காததால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடைபெற்ற நிலையில் ஆத்திரத்தில் தன்னுடைய காதலியின் கழுத்தை நெறித்து அப்தாப் கொலை செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 18-ஆம் தேதி தன்னுடைய காதலியை வாலிபர் கொலை செய்த நிலையில், காதலியின் உடலை வைப்பதற்காக ஆன்லைனில் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் ஒரு கைதேர்ந்த சமையல் நிபுணர் என்பதால் காதலின் உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக வனப்பகுதி, கால்வாய் என சிறிது சிறிதாக அப்புறப்படுத்தியுள்ளார். அதோடு சில நேரங்களில் உடல் பாகங்களை நாய்க்கும் கொடுத்துள்ளார். இதே சம்பவத்தை நினைத்து தான் பல நாள் அழுததாகவும் ஆனால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தினால் அப்படி செய்ததாகவும் அப்தாப் கூறியுள்ளார்.

அதோடு அதிகாலை 2:00 மணி அளவில் காதலியின் உடலை அவர் அப்புறப்படுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தன்னுடைய காதலியின் வங்கிக் கணக்கிலிருந்து 54,000 பணத்தை தன்னுடைய வங்கி கணக்குக்கு அப்தாப் மாற்றியதோடு அவருடைய இன்ஸ்டாகிராமையும் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். இதனால்தான் அப்தாப் மீது  காவல் துறையினருக்கு சந்தேகம் வரவே அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலியை கொலை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது.

Categories

Tech |