Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : தடுமாறும் பஞ்சாப் கிங்ஸ்  ….! 13 ஓவர் முடிவில் 84/4

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.

இதில் கேஎல் ராகுல் 21ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 5 ரன்னில் வெளியேறினார் .இதன்பிறகு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் – மார்க்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர் .இதில் கிறிஸ் கெயில் 18 ரன்னில் வெளியேற ,அடுத்த களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதனால் 13 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது .

 

Categories

Tech |