Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் …. 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

ஹைதராபாத் அணிக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த  37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 5 ரன்னில் வெளியேறினார் .

இதன்பிறகு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 18 ரன்னும் ,நிக்கோலஸ் பூரன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார் .இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது .இதில் ஹைதராபாத் அணி  தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.இதன்பிறகு களமிறங்கிய ஹைதராபாத் அணி  126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

ஆனால் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை மறுக்க முடியாமல் ஹைதராபாத் அணி தடுமாறியது. இதனால் 60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதில்  தொடக்க வீரர் விருத்திமான் சஹாவுடன் , ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார் .இதில் அதிரடியாக விளையாடியஜேசன் ஹோல்டர் 47 ரன்னுடன்இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்தார்.  இறுதியாக ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |