ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .
இதன் பிறகு களமிறங்கிய ஹைதராபாத் அணி 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜேசன் ராய் 60 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் .இறுதியாக ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .இதன் மூலம் ஹைதராபாத் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.