தென்னிந்திய திரையுலகில் 80 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் இயக்குனர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தார்.
இதில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது எனது அம்மாவானம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் வாங்கிய முதல் வீட்டை பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்திற்கு சுற்றி காட்டி உள்ளார். மேலும் மாளிகை போல் காட்சியளிக்கும் அந்த வீட்டுடன் நடிகை ஸ்ரீதேவிக்கும் இருக்கும் நெருக்கமான உறவை பற்றியும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார்.