Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. கடனை இப்போது செலுத்த இயலாது…. இலங்கை அரசு கோரிக்கை..!!!

இலங்கை அரசு பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் தற்போது கடனை திரும்ப செலுத்த முடியாது என்று கூறியிருக்கிறது.

இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாட்டு மக்கள் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். கடுமையாக உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை,  பெட்ரோல், டீசல் மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, தினசரி பல மணி நேரங்கள் மின்தடை போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு, நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை. நிலை மேலும், மோசமாகிக் கொண்டு தான் இருக்கிறது. எனவே, மக்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமாகி வருகிறது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்திடமும், பிற நாடுகளிடமும் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறது. அதன்படி, பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் தற்போதைக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

Categories

Tech |