இலங்கையின் புறநகர் பகுதியான பணத்துறை கொரத்தொடுவ பகுதியில் கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்ற 64 வயதான முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த முதியவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த முதியவர் பலனளிக்காமல் இன்று (ஜூலை 5) உயிரிழந்தார் என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த இலங்கை காவல்துறையினர், குசல் மெண்டிஸை கைது செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான குசல் மெண்டிஸ், அந்த அணிக்காக இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளிலும் 76 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.