இலங்கை அரசானது, சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்காக அந்நாட்டின் தேசிய கொடியுடன் ஒரு நாணயத்தை வெளியிட்டிருக்கிறது.
இலங்கை மற்றும் சீன நாடுகளுக்கு இடையே தூதரக உறவு உருவாகி 65 வருடங்கள் நிறைவானது. இதனை நினைவு கூறும் வகையிலும், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது வருடத்தை நிறைவு செய்ததற்காகவும், இலங்கையின் மத்திய வங்கி, 1000 ரூபாய் நாணயத்தை வெளியிட்டிருக்கிறது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சீனா மற்றும் இலங்கை நாடுகளின் தேசியக் கொடிகள் இருக்கிறது. மறுபக்கத்தில் 1000 ரூபாய் என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி என்று 3 மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, தங்க நாணயங்கள் 500 மற்றும் வெள்ளி நாணயங்கள் 2000 வெளியிடப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.