Categories
உலக செய்திகள்

சீனர்களுக்காக சொந்த மக்களை கைவிட்ட இலங்கை ……!!

ஸ்ரீலங்கன் விமான சேவை சீனர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்ட சபை உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை விமான சேவை மூலம் மீட்டு அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சீனர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது எனவும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்டசபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

“நாட்டின் நலன் கருதி வெளிநாட்டில் உழைத்து வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் போன்ற பலர் தாய் நாடான இலங்கைக்கு திரும்பிவர நினைத்து இலங்கைக்கு அழைத்து செல்லுங்கள் என அரசாங்கத்திடம் கெஞ்சுகின்றனர். நாங்கள் எந்த தனிமைப்படுத்துதலுக்கும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்களை அழைத்துவர எந்த ஏற்பாடுகளும் செய்யாத காரணத்தினால் மாபெரும் பிரச்சனையை எதிர்நோக்கி இருக்கின்றனர் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை மக்கள்.

ஆனால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பிரிட்டன் தலைநகரான லண்டனில் சிக்கியிருக்கும் 218 சீனர்களை அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வந்து இலங்கையிலிருந்து சீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இலங்கை மக்களை அழைத்து வராத ஸ்ரீலங்கன் விமான சேவை சீனர்களை மட்டும் இலங்கை அழைத்துவந்து சீனாவுக்கு அனுப்பி உள்ளதை நாம் எதற்காக பொறுப்பேற்க வேண்டும்” என வசந்த சமரசிங்க கேள்வி கேட்டுள்ளார்.

Categories

Tech |