பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, இந்திய அரசிடம் கடன் கோர திட்டமிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை, கொரோனா தொற்றால் கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுற்றுலா மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயை அதிகம் நம்பியிருத்த இலங்கை பொருளாதாரம், கடந்த இரண்டு வருடங்களாக கடும் நெருக்கடிக்குள்ளானது. விலைவாசி கடுமையாக அதிகரித்திருக்கிறது.
எனவே, இலங்கை அரசு ஒரு பில்லியன் டாலர், இந்தியாவிடம் கடன் கோர திட்டமிட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி ஆகும். இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த வாரத்தில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யிடம், இலங்கை அதிபர் தங்கள் கடனை மறுகட்டமைப்பு செய்தால் எங்களுக்கு பலனாக இருக்கும் என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.