Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை..! விரைவில் இந்தியா வருகை தரும் நிதி மந்திரி… வெளியான முக்கிய தகவல்..!!

இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் நிதி மந்திரி பசில் ராஜபக்சே விரைவில் இந்தியா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பசில் ராஜபக்சே இந்த பயணத்தின் போது இந்தியா-இங்கிலாந்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா நோக்கி பயணம் செய்ய உள்ளார் என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

மேலும் இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக கடனாக கோரியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டு நிதி மந்திரியின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |