லண்டனில் 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹிரன் அபேசேகர கிடைத்துள்ளது.
இலங்கையின் ஹிரன் அபேசேகர லண்டனில் நடைபெற்ற 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்று, Lanka Children’s and Youth Theatre Foundationல் இருந்து டிப்ளமோ பட்டம் பெற்ற ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக வென்றார். இதனை தொடர்ந்து சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்ப ரீதியிலான பரிசுகளையும் பெற்றது லைஃப் ஆஃப் பை நாடகம்.
இந்நிலையில் விருதினை தன் சொந்த நாடான இலங்கைக்கு காணிக்கை செய்வதாக கூறி அவர் தொடர்ந்து பேசுகையில் “இப்போது இலங்கை கடுமையான சூழலில் இருக்கிறது, இப்போது அங்கு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என உருக்கத்துடன் தெரிவித்தார்.