Categories
உலக செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட இலங்கை எம்.பி…. உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கை எம்பி அடித்துக் கொல்லப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. நாடு முழுக்க நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பியான அமரகீர்த்தியும், அவரின் பாதுகாவலரும் உயிரிழந்தனர்.  அமரகீர்த்தி, தன் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்திய போது, அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, போராட்டக்காரர்கள், அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்ததில் உயிரிழந்ததாகவும்  தெரியவந்திருக்கிறது. போராட்டம் நடத்தியவர்கள், அவரை சரமாரியாக தாக்கியதில் ரத்தம் கசிந்து பலியானதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |