இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே எந்த சூழ்நிலையிலும் நான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களோடு இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக் கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல் நம்முடன் நட்பாக இருக்கும் நாடுகளும் இந்த தருணத்தில் உதவிகளை அளிக்க முன் வந்திருக்கின்றன. எங்களுடன் சேர்ந்து மக்கள் செயல்படுவதற்கான ஒத்துழைப்புகளை நீங்கள் அளிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.
என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறீர்கள். நான் பதவி விலகப்போவதில்லை. பதவியிலிருந்து நீக்கத்தான் முடியும். நான் பதவி விலகப் போவதில்லை. எதை பார்த்தும் பயந்து கை விட்டுவிட்டு போக மாட்டேன் என்று கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.