இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமரை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக அதிபர், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அதிபரிடம் பிரேமதாசா தெரிவித்ததாவது, சில நிபந்தனைகளை ஏற்றால் பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது பிரதமர் பதவியை நாளை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும், நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை சிலவற்றை கூறியிருக்கிறார். அதற்கு அதிபர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சஜித் பிரேமதாசா புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.