Categories
தேசிய செய்திகள்

‘இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள்’ – அரசுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்!

இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, புதிய மசோதாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன் பின்பே மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்நிலையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்துவருவதாகவும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |