Categories
உலக செய்திகள்

தேனிலவுக்கு இலங்கை சென்ற புதுமண ஜோடி…. உணவு சாப்பிட்டதால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.!!

தேனிலவு கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற இங்கிலாந்து பெண், ஹோட்டல் உணவை சாப்பிட்ட பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார். 

இங்கிலாந்தில் கடந்த மாதம் 19ம் தேதி, ஹிலன் சந்தாரியா (Khilan Chandaria) மற்றும் உஷீலா பட்டேல் (Usheila Patel) , ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடி   தேனிலவை கொண்டாடுவதற்கு  இலங்கை காலே (Galle) நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றிருந்தனர்.ஓட்டலில் தங்கி  உணவு சாப்பிட்ட பிறகு  அவர்கள் இருவரும் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தியால் அவதிபட்ட நிலையில் உஷீலா பட்டேல் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Image result for On the 19th of last month in England, both Khilan Chandaria and Usheila Patel were married.இதையடுத்து  உஷீலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவர் இறந்ததற்கான  காரணம் தெரியாததால் போலீசார் அவரது கணவரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர். இதனால் கணவர் ஹிலன் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உஷீலாவின் மரணம் தொடர்பான வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது. அப்போது உஷீலா சாப்பிட்ட உணவு விஷமாக மாறியுள்ளதா  என்பது தொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்பட உள்ளது.

Categories

Tech |