Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதுக்கு காரணமான அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யிங்க…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தில் முத்துமணி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையினுள் விசாரணை கைதியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு தொடர்புடைய சிறை அதிகாரிகளின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குப்பதிவு மேற்கொண்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டியும் போராட்டம் நடைபெற்றது.

அப்போராட்டம் நாங்குநேரியில் 34 காவது நாளாக பருத்திக்கோட்டை நாட்டார் சமுதாயத்தினுடைய நல சங்கத்தின் சார்பாக கருப்புக்கொடி ஏந்தி நடைபெற்றுள்ளது. இதில் பருத்திக்கோட்டை நாட்டார் நல சங்கத்தினுடைய தலைவரான சிதம்பரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |