15 தீவிரவாதிகள் லட்சத்தீவில் பதுங்கியுள்ளதால் அண்டை நாடுகளின் கடலோர பகுதிகளுக்கு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் லட்சத்தீவு க்கு புறப்பட்டு சென்று இருப்பதாக இலங்கை காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அண்டை நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரள கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட தொடங்கிவிட்டது.
மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.