Categories
உலக செய்திகள்

கடும் நெருக்கடியில் இலங்கை… உணவு பணவீக்கம் 90.0%-ஆக அதிகரிப்பு…!!!

இலங்கையில் பணவீக்கம் 60.8% மற்றும் உணவிற்கான பண வீக்கம் 90.9% அதிகரித்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு சுமார் 63 லட்சம் மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், விலையற்றம் பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் பல நாட்களாக எரிபொருள் வாங்க காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், இலங்கையில் வருடாந்திரக பணவீக்கமானது 60.8%-ஆக அதிகரித்திருக்கிறது. உணவிற்கான பண வீக்கம் இம்மாதத்தில் 90.9%-ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |