இலங்கை அரசு, சீனாவின் தயாரிப்பான பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு, சீன உளவுக்கப்பலை ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அதனை பொருட்படுத்தாமல், சீனா தங்களின் கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் சீனா, பாகிஸ்தான் நாட்டிற்காக பி.என்.எஸ் தைமூர் கப்பலை தயாரித்திருக்கிறது.
வரும் 15ஆம் தேதி அன்று இந்த கப்பலை கராச்சிக்கு அனுப்ப சீனா திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக, இந்த தைமூர் கப்பலை கராச்சியில் இருக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கு கொண்டு செல்லக்கூடிய வழியில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நாளை புறப்பட்டு, வரும் 15-ஆம் தேதி அன்று கராச்சிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.