Categories
உலக செய்திகள்

“இன்னும் சில தினங்கள் தான்!”…. கடும் சிக்கலை சந்திக்கவுள்ள இலங்கை…!!!

இலங்கையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டும் தான் எரிபொருள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் கடும் சிக்கலான நிலையை சந்திக்கவுள்ளனர்.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால், டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களை மக்களுக்கு விற்க அரசாங்கம் தடை அறிவித்திருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

எனினும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கும் தங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில், நாட்டில் சில தினங்களுக்கு மட்டும் தான் எரிபொருட்கள் கையிருப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடு முழுவதும் முடங்கக்கூடிய நிலை உண்டாகியிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அரசாங்கத்தின் மீதான தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொழும்பு நகரின் தேசிய மருத்துவமனையில் பணிபுரியும் ஜெயந்தா என்ற மருத்துவர், சுகாதாரத்துறை 90% முடங்கியிருக்கிறது. நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர்கள் பலியாகும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |