Categories
உலக செய்திகள்

“தூங்கும்போது ஒரு கண்ணை திறந்தே வைத்திருப்பேன்!”.. இலங்கை நபருடன் தங்கியிருந்தவர் வெளியிட்ட தகவல்..!!

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை நபருடன் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்த நபர் பல அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். அதன் பின்பு, காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அதனையடுத்து அவரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது, இவர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஆக்லாந்தில் கடந்த 2017 ஆம் வருடத்தில், Samsudeen-உடன் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த நபர் தெரிவித்துள்ளதாவது, “நான் கடந்த 2017ம் வருடத்தின் பல மாதங்களில் Samsudeen-உடன் தான் வசித்தேன்.

அப்போது, அவர் சிரிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள, உதவக்கூடிய ஆட்களை உனக்கு தெரியுமா? என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். மேலும், என்னை பிற நாட்டிற்கு அனுப்பி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்கு தடை விதித்தால் சாலையில் செல்லும் யாரையாவது கத்தியால் குத்திக் கொன்று விடுவேன், எனக்கு வெடிகுண்டு எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதும் தெரியும் என்று என்னிடம் கூறினார்.

மேலும், இங்கேயே முடிந்த அளவிற்கு சேதம் உண்டாக்க முயல்வேன் என்றும் கூறினார். அதற்கு நான் அவரிடம், நீ இவ்வாறு செய்தால், அப்பாவி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறினேன். அதற்கு அவர், நியூசிலாந்தில் வசிக்கும் மக்கள் அனைவரும், நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் அவதூறாக பேசக்கூடியவர்கள் என்றார்.

மேலும், ஒரு நாள் Samsudeen கட்டிலுக்கு அடியில் பெரிய கத்தி இருந்தது. அதை நான் பார்த்த பின்பு, எனக்கு பயம் உண்டானது. அதன் பின்பு, நான் தூங்கும்போதெல்லாம் ஒரு கண்ணை திறந்து வைத்திருப்பேன். மேலும், அதிகமான நேரம் வீட்டுக்கு வெளியில் தான் இருப்பேன்” என்றார். அதன் பின்னர், அவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, வேறு வீட்டில் குடியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |