இலங்கையிலிருந்து கனடாவிற்கு அகதியாக வந்த பெண், தன் தாயின் நகையை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
உலகின் பல நாடுகளில் தற்போதும் பல தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் திருமணத்தில் தனக்கு மிகவும் பிடித்த நகையை மகளுக்கு ஆசையாக அணிந்துவிடுவார்கள். அதைப்போல ஒன்ராறியோவில் வசிக்கும் 30 வயதான சுஜா என்ற பெண், சிறுவயதில் போரிலிருந்து தப்பி தன் பெற்றோருடன் இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு அகதியாக வந்திருக்கிறார்.
சுஜாவின் தாய், சுஜாவின் திருமணத்தின் போது ஒரு நெக்லஸை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது, சுஜாவின் பாட்டி, சுதாவின் தாய் சிறுவயதில் இறந்துவிட்டார். எனவே அவரின் சகோதரிகள் சேர்ந்து ஒரு நெக்லஸை, சுஜாவின் தாயாருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்கள். அந்த நெக்லஸை தற்போது சுதாவின் தாய் சுஜாவிற்கு கொடுத்திருக்கிறார்.
அது ஒரு சிறிய செயின், அதில் இருக்கும் கற்களும் விலை உயர்ந்தது இல்லை. எனினும் அது தன் தாய் அணிவித்தது. மேலும், கணவர் இல்லாமல், இரண்டு மகள்களையும் தனியாளாக வளர்த்த தாயின் வரலாற்றை கூறும் அடையாளமாக இருக்கிறது. எனவே சுஜா அதனை மிகப்பெரிய பொக்கிஷமாக பார்த்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதன் விலையை நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அது குறைந்த விலை தான் என்று எனக்கு தெரியும். எனினும் என்னை பொருத்தவரை என் அம்மாவிற்கு உரிய அந்த நெக்லஸ் விலை மதிப்பற்றது என்று கூறியிருக்கிறார்.