Categories
உலக செய்திகள்

26 வயதில் இலங்கை பெண் சாதனை…. உலக புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம்…!!!

லண்டனில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெற்கு ஆசிய ஆடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்து தற்போது உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கிறார்.

சஹானி குணசேகரா என்ற 26 வயது இளம்பெண் கன்யா லண்டன் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் ஐந்து வருடங்களுக்கு முன் தான் பயின்ற பல்கலைக்கழகத்தில் இருக்கும் விற்பனையகத்தில் தெற்கு ஆசிய உடைகளை விற்று வந்தார். இந்நிலையில் உலக புகழ் பெற்ற ASOS நிறுவனத்தில் இவரின் கன்யா லண்டன் இடம் பெற்றிருக்கிறது.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நான் இலங்கையை சேர்ந்தவள். என் அம்மா அவருக்கு தேவையான உடைகளை அவராகவே உருவாக்குவார். தெற்காசியாவை சேர்ந்த அதிகமான பெண்கள் தையல் தைப்பதை ரசித்திருக்கிறேன். அதுவே என்னை உடைகள் மற்றும் ஃபேஷன் துறையை கற்க தூண்டியது.

எனக்காக என் பெற்றோர் பிரிட்டன் நாட்டிற்கு வர பல தியாகங்களை செய்தார்கள். இந்த ஃபேஷன் துறையில் ஆர்வம் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையை தான் தேர்ந்தெடுத்து படித்தேன். புலம்பெயர்ந்தவராக இருக்கும்போது முதலில் வாழ்வாதாரமே எனக்கு முக்கியமாக இருந்தது.

எனவே, பட்டப்படிப்பு முடிந்த பின் சுயமாக தொழில் செய்து குடும்பத்தினரை பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். 2019 ஆம் வருடத்தில் கன்யா லண்டன் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அப்போது திடீரென்று ASOS நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு என் தயாரிப்புகள் மற்றும் தளத்தை விரும்புவதாக தெரிவித்தனர். அதனை நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

தெற்கு ஆசியாவை சேர்ந்த இளம் பெண்களுக்கு நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், எதை செய்யவும் பயப்பட வேண்டாம். மக்கள், கலாச்சாரத்தை பின்பற்ற தயாராகிவிட்டனர். இதனால் தெற்கு ஆசிய ஆடைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |