Categories
உலக செய்திகள்

“அடடே! சூப்பர்”… நிதி நெருக்கடிக்கு மத்தியில்…. இலங்கை அரசு வெளியிட்ட நல்ல செய்தி…!!!

இலங்கை அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலையிலும், பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் வரியில் சலுகை செய்திருக்கிறது.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடி அதிகரித்து, பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அரசாங்கம் பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் மீது இருக்கும் வரிகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க பிற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன.

இந்நிலையில், அவ்வாறு இறக்குமதியாகும் ஐந்து மூலப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதியாகும் சானிட்டரி நாப்கின்களுக்கும் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அந்த வகையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சானிட்டரி நாப்கின்னின் விலையானது 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. எனவே, சுகாதார பொருட்கள் கிடைக்கப்பெறாத பெண்கள் இதன் மூலமாக பயனடைவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |